மான்டே கார்லோ மாஸ்டர்ஸ்: நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் அரையிறுதியில் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-4 1-6 6-4 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் நோவக் ஜோகோவிச்சாய் வீழ்த்தி காஸ்பர் ரூட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் வெற்றிபெறாமையானது தனக்கு நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும் என்றும் குறிப்பாக உலகின் நம்பர் ஒன் வீரரை தோற்கடிப்பது தான் இதுவரை செய்யாத ஒன்று என ரூட் கூறியுள்ளார்.

இதேநேரம் முதல் அரையிறுதி போட்டியில் கிரேக்க வீரரை சிட்சிபாஸ் 6-4 3-6 6-4 என்ற செட் கணக்கில் இரண்டாம் நிலை வீரரான ஜொனிக் சின்னரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 2019 க்குப் பின்னர் மீண்டும் உலக தலைவரிசையில் 10 இடங்களுக்குள் சிட்சிபாஸ் நுழைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *