2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் சாத்தியம் !!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடையில் இன்று நடைபெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில் 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 13 பில்லியன் ரூபாய் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாத சம்பளத்திற்காக 107 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திலும் மே மாதத்திலும் 10 கிலோ விகிதம் 2.7 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத் திட்டம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த உதவியை பெற தகுதியுடைவர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.