தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நேரடி விவதத்தை நடத்த சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவாதத்திற்கான திகதியை அறிவிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஊகிக்கப்படும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரடி விவாதத்திற்கு தயாராக வேண்டும் என முன்னதாக ஹரிணி அமரசூரிய கூறியிருந்தார்.
ஏனைய கட்சிகள் உடன்படவில்லை என்றால் முக்கிய தரப்பினருடன் விவாதம் நடத்த தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்றும் அறிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தியை விவதற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் அழைப்பு விடுத்தது விடுத்திருந்தது.இருப்பினும், இந்த அழைப்பிற்கு தேசிய மக்கள் சக்தி பதிலளிக்கவில்லை.