T20 உலகக் கிண்ணத்தில் ஜொஃப்ரா ஆர்ச்சர் : 2025 பின்னரே டெஸ்ட் போட்டியில் விளையாடுவர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் அடுத்தாண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர், முழங்கை காயம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் எந்தவித போட்டிகளிலும் விளையாடவில்லை.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆடவருக்கான உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடர் மேற்கிந்திய தீவுகளிலும் அமெரிக்காவிலும் நடைபெறுகின்றது.

இந்நிலையில் கோடைக்கு பின்னர் வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவதே அவரது திட்டம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முகாமைதத்துவ பணிப்பாளர் ரொபேர்ட் கேய் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்தியாவிற்கும் அவுஸ்ரேலியவிற்கும் எதிராக அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணிக்குள் இணைந்துகொள்வர் என்றும் ரொபேர்ட் கேய் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற அவரது பங்களிப்பு முக்கியதும்வாய்ந்ததாக அமைந்தது.

இதனை தொடந்து அடுத்தடுத்து காயதிற்குள்ளான அவர் பல முக்கிய போட்டிகளை தவறவிட்டார். இதனால் இங்கிலாந்து அணியும் பல தடுமாற்றங்களை எதிர்கொண்டது.

இலங்கிலாந்து அணியோடு இரண்டுவருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஜொஃப்ரா ஆர்ச்சர், இறுதியாக 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஒரேயொரு டெஸ்டில் விளையாடியிருந்தார்.