இலங்கை மகளிர் அணி வரலாற்று சாதனை !!

தென்னாபிரிக்காவிற்கு எதிராக இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றி இலங்கை மகளிர் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் சுகந்திகா குமாரியும் துடுப்பாட்டத்தில் சமரி அத்பத்து, ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் அரை சதங்கள் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

நேற்று நடைபெற்ற போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்களினால் வெற்றியை பதிவு செய்தது.

இதேநேரம் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.