கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

குறித்த மனு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே பிணை கோரிக்கையை மறுத்து உத்தரவிடப்பட்டது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் வரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்திருந்தது.

இதனை அடுத்து கடந்த 15 ஆம்  திகதி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்ட ஆலோசகர்களினால் பிணை கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மாளிகாகந்த நீதவான் பிணையை நிராகரித்தமை சட்டவிரோதமானது என்பதால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிணையில் விடுவிக்க நடவடிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்ற ஹெகலிய ரம்புகவெல்ல பெப்ரவரி 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.