பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி : நாடு திரும்பினார் சந்திமால்

சட்டோகிராமில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் ட்ரிங்க்ஸ் பிரேக் வரை விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மத்தியூஸ் அதிபடச்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதனை தொடந்து 511 ஒட்டாங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கை பங்களாதேஷ் அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இதேவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் சுகயீனம் அடைந்த காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தினேஷ் சந்திமால் விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *