பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் : 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தனஞ்சய டி சில்வா தலைமையில இலங்கை டெஸ்ட் அணிக்கு குஷால் மெண்டிஸ் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுத் கருனாரத்ன, நிஷான் மதுஷக, ஏஞ்சலோ மத்தியூஸ், சந்திமால், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதார, வனிந்து ஹசரங்க, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், கசுன் ராஜித, விஸ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் சாமிக குணசேகர ஆகியோர் 17 பேர் கொண்ட அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *