இலங்கை மற்றும் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை நடத்த தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் டுபாயில் நடந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கபட்டத்தக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி T20 உலகக் கிண்ண போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் மற்ற ஆறு அணிகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் T20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

இந்த எட்டு அணிகளுக்கு மேலதிகமாக ஜூன் 30 ஆம் திகதி வெளியாகும் ICC T20I அணி தரவரிசையின் அடிப்படையில் மேலும் 4 அணிகள் தகுதி பெறும். மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்றில் மோதும்.

இதேநேரம் 2024 ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்களைக் கொண்டிருக்கும் என்றும் ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *