இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 286 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்துள்ளது.
பங்களாதேஷ் அணியின் முதலாவது விக்கெட் முதலாவது ஓவரின் 3 ஆவது பந்தில் பறிபோனது லிட்டன் தாஸ் எவ்வித ஓட்டங்களை பெற்றக்கொள்ளாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து சௌமியா சர்க்கார் மற்றும் நஜ்மல் ஹுசைன் ஜோடி 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டபோது அணித்தலைவர் நஜ்மல் ஹுசைன் 40 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
தொடந்து ஆரமபத்துப்பட்ட வீரர் சௌமியா சர்க்கார் 68 ஓட்டங்களோடும் மொஹமதுல்லா எவ்வித ஓட்டத்தையும் பெறாமல் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 130 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
இதனை அடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 25 ஓட்டங்களோடும் மெஹிதி ஹசன் மிராஸ் 12, தன்சிம் ஹசன் சாகிப் 18 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் நிதானமாக ஆடிய டவ்ஹித் ஹ்ரிடோய் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களையும் தஸ்கின் அஹமட் 18 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்களையும் பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.