இலங்கை மற்றும் பங்களாதேஷ் மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு சட்டோக்ராம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நடந்து முடிந்த டி20 தொடரை 2–1 என கைப்பற்றிய உற்சாகத்துடன் இலங்கை அணி ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது.

T20 தொடரில் உபாதை காரணமாக பங்கேற்ககாத பத்தும் நிசங்க மீண்டும் அணிக்கு திரும்புவது ஆரம்ப வரிசைக்கு மேலும் வலுசேர்க்கும்.

ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டைச்சதம் அடித்த பத்தும் நிசங்க T20 தொடரில் உபாதை காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

இலங்கை அணி பங்களாதேஷுக்கு எதிராக இதுவரை 54 ஒருநாள் போட்டிகளில் ஆகியுள்ளது. அதில் 42 இல் வென்று 10 போட்டிகளில் மாத்திரம் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *