பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு !

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ள நிலையில் ஒருநாள் போட்டிகள் 13, 15, 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை ஒருநாள் அணிக்கு சரித் அசலங்க துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அணியில் பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, கமிந்து மென்டிஸ், சஹான் ஆராச்சிகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அத்தோடு வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, அகில தனஞ்சய, சாமிக கருணாரத்ன, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், லஹிரு குமார ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *