தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றது இலங்கை மகளிர் அணி !

ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

இதன் போது, மூன்று T20I மற்றும் மூன்று ODI போட்டிகளில் தென்னாப்பிரிக்க பெண்கள் அணியோடு இலங்கை அணி விளையாடவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக குறித்த ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

முதலாவது T20 போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி பெனோனி மைதானத்திலும் 2 வது போட்டி 30 ஆம் திகதி போட்செஃப்ஸ்ட்ரூமிலும் 3 ஆவது போட்டி அடுத்தமாதம் 3 ஆம் திகதி ஈஸ்ட் லண்டனிலும் நடைபெறவுள்ளன.

இதனை தொடர்ந்து 09, 13, 17 ஆம் திகதிகளில் ஒருநாள் போட்டிகள் ஈஸ்ட் லண்டன், கிம்பர்லி மற்றும் போட்செஃப்ஸ்ட்ரூம் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *