பங்களாதேஷ் அணி 170/2 (ஷண்டோ 53*, லிட்டன் தாஸ் 36, பத்திரன 2-28) இலங்கை 165/5 ( கமிந்து மெண்டிஸ் 37, குஷால் மெண்டிஸ் 36, சர்கார் 1-5) 8 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி.
சில்ஹெட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவின் அரை சதம் இலங்கைக்கு எதிரான தொடரை சமன் செய்ய பங்களாதேஷ் அணிக்கு உதவியது.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டத்திலும் இலங்கை அணியை துடுப்பெடுத்தாத பங்களாதேஷ் அணி அழைத்து.முதலில் களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டங்கள் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இதனை தொடந்து இலங்கை அணையின் இன்னிங்ஸை கமிந்து மெண்டிஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் பொறுப்பேற்றனர். இருவரும் இணைந்து பவர்பிளே முடிவில் 49 ஓட்டங்களை குவித்தனர்.
பின்னர் ஒன்பதாவது ஓவரில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இலங்கை தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
பத்தாவது ஓவரில் கமிந்து மெண்டிஸ் ரன் அவுட் ஆனார், பின்னர் 13 வது ஓவரில் சதீர சமரவிக்ரம, முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சில் அட்டமிழந்து வெளியேறினார்.
தொடந்து 10 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்த சரித் அசலங்க, மெஹிடி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இலங்கையின் அனுபவம் வாய்ந்த மேத்யூஸ் மற்றும் சானக ஆகியோர் சிறந்த இணைப்பட்டத்தை கொடுக்க இலங்கை அணி 20 ஓவர்களில் 165 ஓட்டங்களை குவித்தது.
இதனை தொடந்து பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷின் தொடக்க ஆட்டக்காரர்களான சர்க்கார் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் அணிக்கு திடமான தொடக்கத்தை அளித்தனர்.
பவர்பிளேயில் மொத்தம் 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் இருவரும் குவித்தனர். இருப்பினும் நான்காவது ஓவரின் தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய மூன்றாவது நடுவர் தீர்ப்பில் சர்க்கார் தப்பினார்.
இருவரும் மதீஷ பத்திரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க ஷாண்டோ மற்றும் ஹ்ரிடோய் ஆகியோர் இறுதிவரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.