பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 அணி அறிவிப்பு : பெத்தும் நிசங்கவிற்கு பதிலாக அவிஷ்க பெர்னாண்டோ அணிக்குள் !!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அணியில் பெத்தும் நிசங்கவிற்கு பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ உள்வாங்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி T20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் இந்த 17 பேர் கொண்ட அணிக்குள் இடம்பெற்றுள்ளார்.

17 பேர் கொண்ட இந்த அணியில் வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷனக, மகேஷ் தீக்ஷன, தனஞ்சய டி சில்வா ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேலும் குசல் பெரேரா, மதுஷங்க, நுவான் துஷார, மதீஷ பதிரன, அகில தனஞ்சய, பினுர பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, ஜெஃப்ரி வாண்டர்சே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *