கடைசி ஓவரின் நான்காவது பந்து தொடர்பில் போட்டி நடுவர் வழங்கிய தீர்மானம் குறித்து இலங்கை அணியின் தலைவர் பணிந்து ஹசரங்க கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“சர்வதேசப் போட்டியில் இவ்வாறான நடுவர் தீர்மானங்களை எதிர்பார்க்க முடியாது. பந்து இன்னும் கொஞ்சம் உயர்ந்திருந்தால், வீரரின் தலையில் பட்டிருக்கும், அதனை பார்க்கவில்லை என்றால், அந்த நடுவர் சர்வதேச தரத்திற்கு பொறுத்தமற்ற நடுவர்.
நடுவர் வேறு பணியைத் தேர்ந்தெடுப்பதே பொருத்தமானது. இவ்வாறான நோ போல் பிரச்சனைகளுக்கு நடுவர் தீர்மானங்களை மூன்றாவது நடுவருக்கு அனுப்பி மீளாய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால், மூன்றாவது நடுவருக்கு அதை பரிந்துரைக்க கள நடுவருக்கு வாய்ப்பு இருக்கும்” என கூறியுள்ளார்.