தனஞ்சய டி சில்வா, சரித் அலசங்க, தீக்ஷனவிற்கு ஓய்வு : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது ஆப்கானிஸ்தான்

CBC TAMIL NEWS : தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணியில் தனஞ்சய டி சில்வா, சரித் அலசங்க மற்றும் மகேஷ் தீக்ஷண ஆகியோருக்கு ஒளிவு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக குஷால் பெரேரா, கழிந்து மெண்டிஸ் மற்றும் அகில தனஞ்சய ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இலங்கை அணி மிகவும் வலுவாக உள்ளது, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஆப்கானிஸ்தானை க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதல் கடைசி வீரர்கள் வரை பிரகாசிக்க பந்துவீச்சிலும் இலங்கை அணி மிகவும் வலுவாக உள்ளது.

எவ்வாறாயினும் இரண்டு டி20 போட்டியில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறப்போராடவுள்ளது. அவ்அணி சார்பாக பந்து வீச்சாளர்கள் பவர்பிளேயில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த ஆட்டத்தில் நபி மற்றும் ஒமர்சாய் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

மறுபுறம், துப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வலுவாக இருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான இந்தத் தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ரங்கிரி தம்புள்ளை மைதானத்தை பொறுத்தவரை இன்றைய ஆடுகளம் ஆரம்ப ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கும் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கம் சாதகமாக இருக்கும்.

முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 160 ஓட்டங்களும் 2வது இன்னிங்ஸ் சராசரி யாக 152 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் நாணய சுழற்சியில் வென்ற அணி முதலில் துடுப்பெடுத்தாடலாம்.