3வது T20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 210 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தம்புள்ளையில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதன்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி பவர்பிளே முடிவில் 72 ஓட்டங்களை குவித்தது. அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹஜ்ரத்துல்லாஹ் சஸாய் 37 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தொடந்து சிறப்பிக்க விளையாடிய ஹஜ்ரத்துல்லாஹ் சஸாய் 22 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 45 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து 8.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து 100 ஓட்டங்களை கடந்தது. தொடந்து சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடிக்க இது சர்வதேச T20 போட்டியில் அவர் பெற்றுக்கொண்ட 7 ஆவது அரைசதமாக பதிவாகியது.
தொடந்து இப்ராஹிம் சத்ரான் 10 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது அணியின் ஓட்ட எண்னிக்கை 113 ஆக இருந்தது. தொடந்து அஸ்மத்துல்லா உமர்சாய் ஆடுகளம் புகுந்தார்.
இதனை தொடந்து 43 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு 6 ஓட்டத்தோடு 70 ஓட்டங்களை குவித்த நிலையில் வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்க ஆப்கான் அணி 3 விக்கெட்களை 141 ஓட்டங்களை குவிந்திருந்தது.
பின்னர் அஸ்மத்துல்லா உமர்சாய் 31 ஓட்டங்களோடு மதீஷ பதிரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடந்து வந்த கரீம் ஜனத் அடுத்த பந்திலேயே எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓய்வார்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை மாத்திரமா இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனை அடுத்து 210 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.