பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி : போட்டி அட்டவணை வெளியானது !

CBC TAMIL NEWS :அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி, பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டதாக இலங்கை அணியின் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் தொடர் ஆரம்பமாகின்ற நிலையில் இப்போட்டிகள் மார்ச் 04, 06 மற்றும் 09 ஆகிய திகதிகளில் சில்ஹெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

இதனை தொடந்து ஒருநாள் தொடர், 13, 15 மற்றும் 18 ஆகிய திகதிகளில் Zour Ahmed Chowdhury Stadium மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இறுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 முதல் 26 வரையும் இரண்டாவது போட்டி மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரையும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *