வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் !

CBC TAMIL NEWS : வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வாகன இறக்குமதியை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் எத்தனை வாகனங்கள் தேவை என்பதை தீர்மானிக்க குழுவை நியமித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அண்மைக் காலத்தில் 29 வாகனங்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சுக்கு 21 வாகனங்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு மூன்று வாகனங்களுமே இறக்குமதி செய்யப்பட்டதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.