CBC TAMIL NEWS : இலங்கை / உலக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பாத்துள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது பருவம் இந்த ஆண்டு ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
24 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஜூலை முதலாம் திகதி முதல் 21 வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
5 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் முதல் சுற்றில் 20 போட்டிகளும், தகுதி சுற்றுப்போட்டிகள் இரண்டும் வெளியேற்று போட்டியும் இறுதி போட்டியும் என மொத்தம் 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 24 வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டிருக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கடந்த நான்கு பருவங்களில் மூன்றில் ஜப்னா கிங்ஸ் அணி (ஒன்றில் ஜப்னா ஸ்டாலியன்) சாம்பியன் பட்டம் வென்ற அதேநேரம் இறுதியாக நடந்த போட்டியில் பி லவ் கண்டி அணியும் சம்பியன் பட்டம் வென்றிருந்தது.