இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது பல்லேகலையில் ஆரம்பமாகியுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து விளையாடி வருகின்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் இப் போட்டியில் வணிந்து ஹசரங்க மற்றும் மகேஷ் தீக்சன ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக சகலதுறை வீரர் துணித் வெல்லலாகேயும் அகில தனஞ்சயவும் 11 பேர் கொண்ட இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் இத்தொடரில் ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும் முனைப்போடு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கும் நிலையில் அதிலும் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி சகத்துறை வீரரான ஷரபுதீன் அஷ்ரஃப் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பரீட் அகமட் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுகின்றனர்.