தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் மற்றும் அவுஸ்ரேலிய T20 போட்டிகளில் இருந்து மிட்செல் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் இருந்து டெரில் மிட்செல் விலக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்படும் டெரில் மிட்செல் அதில் இருந்து இன்னும் மீளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மூன்றாவது குழந்தை கிடைக்கவுள்ள நிலையில் குறித்த போட்டியில் பங்குகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.