ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களுக்கு நட்டஈடு வழங்கும் பணத்தை நாட்டை திவாலாக்கியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.
எப்போதும் நஷ்டமடைந்து வரும் நிறுவனங்களுக்கு வரி செலுத்துவோரின் பணத்தில் சலுகைகளை வழங்குவது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பொருளாதாரத்தை சுருக்காமல், நாட்டை வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிநடத்துவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
அத்தோடு தனியார் துறையே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொருளாதார இயந்திரம் என தாம் நம்புவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.