ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியில் இருந்து முன்னாள் அணித் தலைவர் தசுன் சானக விலக்கப்பட்டுள்ளார்.
சிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பிரகாசிக்க தவறியதை அடுத்து உபுல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழுவினால் தசுன் சானக விலக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் சகலதுறை ஆட்டக்காரராக சாமிக்க கருணாரத்ன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஒருநாள் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய சிம்பாப்வே தொடரில் இருந்து வெளியேறிய சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன, துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு வரிசையை மேம்படுத்தியத்தை அடுத்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்குள் மீண்டும் ஆரமப துடுப்பாட்ட வீரரரான பத்தும் நிசங்க இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் ஜெஃப்ரி வண்டர்சே, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குசல் மெண்டிஸ் தலைமையினால்ந இந்த அணியில் சரித் அசலங்க, குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், ஜனித் லியனகே, ஷெவோன் டேனியல், நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, அகில தனஞ்சய, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமிர, ப்ரோமோத் மதுஷன், சாமிக் கருணாரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ரஷித் கான், முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வராத நிலையில் அவரை தவிர்த்து இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.