விசா இல்லாத பயணம் இலங்கையும் தாய்லாந்தும் பரிசீலனை

CBC TAMIL NEWS : பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையும் தாய்லாந்தும் விசா இல்லாத பயணம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துடன் நேற்று சுதந்திர வர்த்தகத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அதற்காக இலவச வீசா பயண ஏற்பாட்டிற்கான உடன்படிக்கையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க தாம் இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஏற்கனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பு இருந்தே இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.

ஆசியான் கடவுசீட்டை வைத்திருப்பவர்கள் தென்கிழக்காசிய உறுப்பு நாடுகளில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களில் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *