இடைவேளையின்போது ஆப்கானிஸ்தான் அணி 251 ஓட்டங்களை பெற்று 10 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பமாகிய நிலையில் தொடந்து தனது இரண்டாவது இன்னிஸிற்காக ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகின்றது.
போட்டி ஆரம்பமாகி மூன்றாவது ஓவர் இடம்பெறும் போது ரஹ்மத் ஷா 106 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அரைச்சம் கடந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்றுக்கொள்ளும் 3 ஆவது அரைச்சதமாக பதிவாகியது.
இதனை தொடந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 207 பந்துகளில் 100 ஓட்டங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டபோது கசும் ராஜித வீசிய பந்தில் ரஹ்மத் ஷா 57 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடந்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மற்றும் இப்ராஹிம் சத்ரனின் நிதான துடுப்பாட்டத்தை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து 230 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடந்து முதல்பாதி ட்ரிங்ஸ் பிரேக்கை அடுத்து போட்டி ஆரம்பமான நிலையில் சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 259 பந்துகளில் 114 ஓட்டங்களை குவித்திருந்தபோது பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடந்து பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் 37 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 18 ஓட்டங்களை பெற்றிருந்த அணித்தலைவர் ஹமதுல்லா ஷாகிதி ஆட்டமிழந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி 246 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
இதன்பின்னர் களமிறங்கிய விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இக்ரம் அலிகில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் குஷால் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஒரு ஓட்டத்தோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதேவேளை தொடந்து களம்புகுந்த குவைசி அஹமட் பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் தஞ்சைய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடந்து சியா ஊர் ரஹ்மான் எவ்வித ஓட்டங்களை பெறாமல் பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் மதியநேர இடைவேளைக்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. இதனை அடுத்து மதியநேர இடைவேளை அறிவிக்கப்பட்டது.