ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 56 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கடந்த 2ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 241 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கான் அணி, 296 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை அணிக்கு 56 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அணி, 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், 56 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.