தம்புள்ளை மைதானத்தில் நீச்சல் தடாகம் உள்ளிட்ட புதிய வசதிகள் : ஜனாதிபதியால் நாளை திறப்பு

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதிய நீச்சல் தடாகம், நீர் சிகிச்சை மற்றும் காயம் மறுவாழ்வு பிரிவு மற்றும் Modern Flood Light System வசதிகளை இலங்கை கிரிக்கெட் சபை திறக்கவுள்ளது.

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் சபையினால் அமைக்கப்பட்ட பல கட்டடத் தொகுதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (05) திறந்துவைக்கவுள்ளார்.

ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபையின் அழைப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்த கட்டடங்களை திறந்துவைப்பர் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும் குறித்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது அதிநவீன எல்.ஈ.டி ஒளியுடன் கூடிய விளையாட்டு அரங்கம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் தடாகம், நீர் சிகிச்சை மற்றும் காயம் மறுவாழ்வு பிரிவு போன்ற புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை உள்ளக வலை மற்றும் பயிற்சி வசதியையும் புதிய ஊடக மையம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதன் மூலம் வடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்காண கிரிக்கெட் வளர்ச்சி மேலும் வலுவடையும் என இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்க்கின்றது.