இரண்டாவது இன்னிக்ஸை தொடங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடுகின்றது ஆப்கான் அணி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான இன்று 241 ஓட்டங்கள் பின்னிலையோடு ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது.

இலங்கை அணி வீரரான சாமிக்க குணசேகர உபாதை காரணமாக போட்டியின் இடைநடுவே வெளியேறியமை காரணமாக வேகப்பந்து வீச்சாளர் கசும் ராஜித இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆரமப துடுப்பாட்ட வீரர்களின் நிதான துடுப்பாட்டம் காரணமாக மதியநேர இடைவேளையின் போது ஆப்கானிஸ்தான் அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 35 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக இப்ராஹிம் சத்ரான் 21 ஓட்டங்களையும் நூர் அலி சத்ரான் 12 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி முதல் பாதியில் இலங்கை அணி முதல் இன்னிஸிற்காக 9 விக்கெட்களை இழந்து 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக நவீத் சாதராண 4 விக்கெட்களையும் நிஜாத் மசூத் மற்றும் குவைசி அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இதனை தொடந்து 241 ஓட்டங்கள் பின்னிலையொடு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆப்கானிஸ்தான் அணி தொடங்கியது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.