எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் : திணறும் இலங்கை அணி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சிற்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை எடுத்துள்ளது.

சிறப்பான மற்றும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வரும் இப்ராஹிம் சத்ரன் 217 பந்துகளில் 11 4 ஊட்டங்களோடு 101 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா, இரண்டாவது இன்னிங்சிலும் 98 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இன்றைய நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விகேட்டிடனை மாத்திரமே இழந்திருந்தது. இலங்கை அணி சார்பாக அசித்த பெர்னாண்டோ 35 ஓட்டங்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

நூர் அலி சத்ரன் 47 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்கு விளையாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 439 ஓட்டங்களை குவித்தது.

அதன்படி 3வது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை விட 42 ஓட்டங்கள் பின்தங்கி இருப்பதோடு நாளை நான்காம் நாளை எதிர்கொள்ளவுள்ளது.