அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவிற்கு எதிரான சமன் ஏக்கநாயக்க மனு விசாரணை

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

33 மில்லியன் அரச நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு தெரிவித்தது.

அதனடிப்படையில், சமன் ஏக்கநாயக்கவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்யுமாறும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் பரிந்துரைத்தது.

எவ்வாறாயினும் தான் அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்தில் சட்டத்திற்கு உட்பட்டு பிரதமரின் செயலாளராக தனது பணிகளைச் செய்ததாகக் கூறியுள்ளார்.

இதன்பின்னர் இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.