இணைய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்க வேண்டிய புதிய திருத்தங்கள் இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கூகுள், யாகூ, அமேசன் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சட்டத்தில் திருத்தும் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் சட்டம் திருத்தப்படாவிட்டால், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்றும் குறித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, பல திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இன்று அல்லது அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.