ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சற்றுமுன்னர் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இறுதியாக கடந்த ஆண்டு 5 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியிருந்தன. இதில் இலங்கை அணி 3 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றன.
எவ்வாறாயினும் ஆப்கானிஸ்தான் அணி ODI உலகக் கிண்ண தொடரில் சம்பியன் பட்டங்களை வென்ற 3 அணிகளை வீழ்த்தியிருந்தது. அதேநேரம் சம்பியன்ஸ் டிரோபிக்கும் தயாராகி வருகின்றது.
இதேநேரம் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் டிரோபிக்கு தகுதி பெற இலங்கை அணி தவறியதால், அடுத்த 3 வருடங்களுக்கு இலங்கை அணிக்கு பெரிய தொடர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.