அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகளின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் தலைநகரின் கிழக்கில் பாக்தாத்தில் ஒரு வாகனம் குறிவைக்கப்பட்டபோது, கட்டாய்ப் ஹிஸ்புல்லாவின் தலைவரும் அவரது இரண்டு காவலர்களும் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கட்டாய்ப் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி அபு பக்கீர் அல்-சாதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாக்தாத்தின் மாஷ்டல் பகுதியில் நேற்று இரவு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜோர்தானில் மூன்று அமெரிக்க துருப்புக்களைக் கொன்ற ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு போராளிகளே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.