அவுஸ்ரேலியா சென்றார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்றுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றவுள்ள 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மாநாடு பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி ஆராயவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.