பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) முதல் அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
பேக்கரிகள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது என்றும் இதன்போது நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 பேக்கரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.