பெரும்பான்மையை இழந்த தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி 81 ஆயிரத்துக்கும் அதிகளவிலான வாக்குகளை பெற்று மொத்தம் 48 ஆசனங்களை வென்று கொழும்பு மாநகர சபையில் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், மிகப்பெரிய உள்ளூராட்சி அதிகாரசபையின் நகராட்சி நிர்வாக அமைப்பான கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 58,375 வாக்குகளைப் பெற்று 29 ஆசனங்களை பெற்றுள்ளது, அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 26,297 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) முறையே 5 மற்றும் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளன.