கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கடுகதி ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் இந்த கடுகதி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 5.30 இற்கு புறப்படும் ரயில் இரவு 11.38 க்கு காங்கேசன்துறை நிலையத்தை அடையும்.
பின்னர் அன்றைய தினம் பகல் 12.30 ற்கு காங்கேசன்துறை நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணியளவில் கோட்டை நிலையத்தை வந்தடையும்.
முதல் வகுப்பு பெட்டிகள் பத்தைக் கொண்ட இந்த கடுகதி பயணத்திற்கான கட்டணம் 3, 200 ரூபாய் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.