தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பாக பிரதி தபால் மாஅதிபராக சிரேஷ்ட தபால் அதிபர் ராஜித கே ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக பரிமாற்றுவதற்கு தபால் திணைக்களங்கள் கடமைப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்திற்காக சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் கூறியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.