அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க நடவடிக்கை – மனித உரிமை ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என பலராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரச அதிகாரிகள் தற்போதுள்ள தேர்தல் சட்டங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

அரச அதிகாரிகள் சட்டத்தை மீறி சில வேட்பாளர்களுக்கு ஆதரவை வழங்குவது மனித உரிமை மீறல் என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளும் அரச நிறுவனங்களும் மனித உரிமைகளை மீறாமல் சீயற்படுவது மிகவும் அவசியம் என்றும் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.