16வது கோபா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மியாமி மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இப்போட்டியில் போட்டி நேரமான 90 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல்களை புகுத்த தவறியதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் மார்டினஸ் ஒரு கோலை புகுத்த அர்ஜென்டினா அணியின் வெற்றி உறுதியானது.
இரண்டாவது பாதியின் நடுவே லியோனல் மெஸ்ஸி காயமடைந்து வெளியேறிய நிலையில் அவர் பின்னர் பார்வையாளராகவே போட்டியை கண்டுகளித்தார்.
மார்டினஸ் இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக விளங்கிய அதேநேரம் இந்த தொடரில் புகுத்திய ஐந்து கோல்களுடன் கோல்டன் பூட்டை வென்றார்.
இதேநேரம் மைதானத்திற்கு வெளியே டிக்கெட் இல்லாத ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதோடு பலரும் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை 16 ஆண்டுகாலம் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை நிகழ்த்திய அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் 36 வயதான டி மரியா இன்றோடு ஓய்வையும் அறிவித்தார்.