நியுகலடோனியாவில் மீண்டும் கலவரங்கள் தலைதூக்கின

கடந்த மாதம் அங்கு இடம்பெற்ற கலவரத்தோடு தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் கலவரங்கள் தொடங்கி உள்ளன.

பிரான்ஸின் ஆதிக்கத்துக்கு எதிராக கடந்த மாதம் நியுகலடோனியாவில் கலவரங்கள் இடம்பெற்றன. பிரான்ஸின் உதவியோடு இந்த கலவரங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

அன்றைய கலவரங்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஒன்பது பேர் உயிர் இழந்தனர். பெரும் தொகையான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுதந்திர செயற்பாட்டாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் விசாரணைக்கு முந்திய தடுத்து வைப்புக்காக பிரான்ஸ{க்கு நாடு கடத்தப்பட்டனர்.

கலவரங்களுக்கு பயந்து இரவோடு இரவாக இரகசியமாக இவர்கள் நேற்று விமானம் மூலம் பிரான்ஸ{க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை கேள்விபட்ட நியுகலடோனியா மக்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் வாகனங்களுக்கு தீ மூட்டி வீதிகளை மறித்து இரவு முழுவதும் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது