இலங்கை வருகின்றார் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர்!!

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவைஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இதனை தொடந்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.