நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பாரா அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ?

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.