பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் தாம் எதிர்ப்பதாக சீன அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இதேநேரம் ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மத்திய கிழக்கில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்காமல் பாத்துக்கொள்வது மிக முக்கியமானது என்றும் நெதர்லாந்து தெரிவித்துள்ளது.
பதட்டங்கள் அதிகரிக்காமல் இருக்வும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறியுள்ள கனடா, இத்தாலியில் நடைபெறும் ஜீ-7 மாநாட்டில் நிலைமை குறித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளது.
மத்திய கிழக்கின் நிலைமை குறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு செயலையும் தாம் கண்டிப்பதாகவும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் நிலைமை மோசமடையாமல் தடுக்க தேவையான அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் ஜப்பான் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது.