யாழில் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் மோசடி : கொழும்பில் பதுங்கியிருந்த பெண் கைது !!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து கொழும்பில் தலைமறைவாகியிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும் , சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த பெண் விளம்பரங்களை செய்துள்ளார்.

இதன் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு முறைப்படு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை குறித்த பெண் கொழும்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் கொழும்பு பொலிஸாருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.