புத்தாண்டுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
ட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும் சில்லறை விலை 55 ரூபாயாகவும் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் இடைத்தரகர்கள் விலையை உயர்த்தி உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக மிக குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மரக்கறி வகைகளின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
அத்தோடு கடந்த நாட்களை விட மீன் விலையும் ஓரளவு அதிகரித்துள்ளதாக சந்தை விலகல் காட்டுகின்றன.