தென் கொரியா நாடாளுமன்றத் தேர்தளுக்கான வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குகளை என்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல் இது என கண்காணிப்பளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியில் இருக்கவுள்ள ஜனாதிபதி யூன் சுக் யோலின் எதிர்காலம் குறித்தும் இந்த தேர்தல் தீர்மானிக்கும் என நம்பப்படுகின்றது.
300 இடங்கள் கொண்ட நாடாளுமன்றில் எதிர்க்கட்சி 197 இடங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் என கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி மீதும் அவரது மக்கள் சக்தி கட்சியின் மீதும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்திருக்கும் நிலையில் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.