அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளின் 2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதனை அடுத்து 2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.